personal Blog

Tuesday, February 27, 2007

போக்குவரவு சமிக்ஞை

அவன் சாலையில் செல்லும் சராசரி இரு சக்கர வாகன ஓட்டி, அன்றும் அதே அவசர கதியில் அலுவலகம் விரைந்து கொண்டிருந்தான். அண்ணா சாலையின் ஒரு போக்குவரவு சமிக்ஞையில், அவன் வண்டி நிறுத்தம் கொண்டது. அங்கு ஒரு சாலை ஓர சிறுவன் ஓடி வந்து அவன் வண்டியை துடைக்க துவங்கினான், அவன் தடுத்தும் கேட்காமல்! தன் வேலை முடிந்த பின் சிறுவன் அவனிடம் கை ஏந்தலானான். அவன் சட்டை ஏதும் செய்யாது போகவே, அடுத்த வாடிக்கையாளரை நோக்கி பயணமானான்.

சில வினாடிகளே கழிந்திருக்கும், அவனுடைய வாகன ஓட்டுனர் உரிமம் உட்பட மற்றைய உரிமங்களைக் காட்டுமாறு போக்குவரத்து காவலாளி நிர்பந்தித்தார். அவனுடைய வாகனக் காப்புரிமம் காலாவதியான காரணத்தால், அந்த போக்குவரத்து காவலாளிக்குக் கையூட்டாக 200 ரூபாயைத் திணித்தான்.

அச்சமயம், அந்த சிறுவன் தன் சகாக்களுடன்

வெறேதோ பேசி சிரித்து கொண்டிருந்தான். அவனோ குற்ற உணர்ச்சியுடன் அங்கிருந்து விரையலானான்.

நா. சு. தேவராஜ்

No comments: